உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீரிப்பள்ளம் ஓடையில் செடி, கொடி அகற்றம்

கீரிப்பள்ளம் ஓடையில் செடி, கொடி அகற்றம்

கோபி: கோபி பஸ் ஸ்டாண்டில், மேற்கு வாயில் வழியே, உள்ளே நுழையும் வழியின் குறுக்கே, கீரிப்பள்ள ஓடை செல்கிறது. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே, சத்தி சாலையின் குறுக்கே மற்றொரு பாலமும் உள்ளது. இரு பாலத்துக்கு இடைப்பட்ட பகுதியில் செல்லும் ஓடை பகுதியில், செடி மற்றும் கொடி வளர்ந்து புதர்போல் காணப்பட்டது. இதனால் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்கி, ஊருக்குள் புகும் என மக்கள் கூறினர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக இரு பாலத்துக்கு இடைப்பட்ட பகுதியில், செடி மற்றும் கொடியை நகராட்சி ஊழியர்கள் நேற்று வெட்டி அகற்றினர். அதேசமயம் கீரிப்பள்ள ஓடை இன்னும் துார்வாரப்படாமல் உள்ளதாக, மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை