மேலும் செய்திகள்
பாலத்தில் சிக்கிய லாரி; போக்குவரத்து பாதிப்பு
02-May-2025
ஈரோடு:ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில், சீரமைப்பு பணி நேற்று துவங்கியது. கரூர், காங்கேயம், பழனியில் இருந்து வரும் கனரக வாகனங்கள், பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில், சாலை சீரமைப்பு பணி நேற்று துவங்கியது. ரயில்வே துறையினர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே நெடு ஞ்சாலை துறையினர் இப்பணியை மேற்கொண்டனர். ஆனால், சில மாதங்களிலேயே சாலை பழுதாகி வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பாலத்தின் கீழ் ஏராளமான தண்ணீர் தேங்கி நிற்கிறது.ரயில்வே நுழைவு பாலத்துக்கு அடியில் கீழ்ப்புற நுழைவு சாலை, மேல் புற நுழைவு சாலைகள் உள்ளன. காளைமாட்டு சிலையில் இருந்து செல்லும் இலகு ரக, கனரக வாகனங்கள் எப்போதும் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பூந்துறை சாலை, கரூர் சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக கனரக வாகனங்கள் சாஸ்திரி நகர், ரயில்வே மேம்பாலம், சென்னிமலை சாலை வழியாக ஈரோடு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக நாடார்மேடு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு பாலத்தின் கீழ், ஏற்கனவே இருந்த கான்கிரீட் தளத்தை உடைத்து அகற்றும் பணி நடந்து வருகிறது.
02-May-2025