உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வலம்புரி நர்த்தன வேத விநாயகர் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்

வலம்புரி நர்த்தன வேத விநாயகர் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்

கோபி: கோபி, தெப்பக்குளம் வீதியில் உள்ள வலம்புரி நர்த்தன வேத விநாயகர் கோவிலில், திருப் பணிகள் தற்போது தீவிரமாக நடக்கி-றது.கோபி, தெப்பகுளம் வீதியில், வலம்புரி நர்த்தன வேத விநாயகர் என்ற பழமையான கோவில் உள்ளது. வேம்பு மற்றும் அரச மரத்-துடன் இணைந்த விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி மற்றும் ஆருத்ரா தரிசனம் திருவிழா சமயத்தில், பல்லக்கில் சுவா-மிகள் பட்டி சுற்றி வருதல் என கோலாகலமாக நடக்கும். அத்த-கைய சிறப்பு வாய்ந்த கோவிலின் கட்டடம், மேற்கூரை, சுற்றுச்-சுவர் புதுப்பித்து, திருப்பணி மேற்கொள்ள ஊர்ப்பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி மக்கள் பங்களிப்பு நிதியில், திருப்ப-ணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது. குறிப்பாக கோவிலை சுற்றி, பொக்லைன் கொண்டு குழி பறித்து, திருப்பணிகள் நடக்கி-றது. அப்பணிகள் அனைத்தும், இரு மாதத்தில் முடிக்கவுள்ளதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி