குடியரசு தினவிழா போலீஸ் ஒத்திகை
ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தினவிழா நாளை காலை, 8:00 மணிக்கு, ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசிய கொடியேற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்-கிறார். பின் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது குடும்-பத்தார் கவுரவிக்கப்படுவர். இதையடுத்து அரசு மற்றும் தனியார் துறைகள், தனி நபராக சிறப்பாக செயல்பட்டமைக்கான பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். இதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.இந்நிலையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை, ஆயுதப்-படை மைதானத்தில் நேற்று நடந்தது. இன்று இதே மைதா-னத்தில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும், ஐந்து பள்ளிகளை சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடத்-துகின்றனர்.