உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாட்டை பட்டாவாக மாற்றி வழங்க கோரிக்கை

சுடுகாட்டை பட்டாவாக மாற்றி வழங்க கோரிக்கை

ஈரோடு, :விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாவட்ட செயலர் கமலநாதன் தலைமையிலான கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது: மொடக்குறிச்சி தாலுகா, ஓலப்பாளையம், திருவள்ளுவர் நகரில், 150க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர்கள் குடும்பம் வசிக்கிறோம்.இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால், உடலை மொடக்குறிச்சி சந்தை பேட்டை அருகே உள்ள சின்னதோப்பு என்ற இடத்தில் புதைத்து, சுடுகாடாக பயன்படுத்துகிறோம். அவ்விடம் தற்போது நெடுஞ்சாலை துறை வசம் உள்ளது. பல ஆண்டாக சுடுகாடாக பயன்படுத்தும் இடத்தை, எங்கள் சமூக மக்களுக்கு சுடுகாடாக பட்டா செய்து வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்