உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாக்கடை வடிகாலை சீரமைக்க கோரிக்கை

சாக்கடை வடிகாலை சீரமைக்க கோரிக்கை

ஈரோடு, ஈரோடு கைகாட்டிவலசு, திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:திருவள்ளுவர் நகர் பகுதியில் பிரதான சாலையில் சாக்கடை கால்வாய் கட்டி, 40 ஆண்டுக்கு மேலாகிறது. பல இடங்களில் உடைந்தும், சாலையில் இருந்து தாழ்வாகவும் செல்வதால், கழிவு நீர் தேங்கி குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலை, குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது. அவற்றுடன் விஷப்பூச்சிகள், சாக்கடை கழிவுகளும் வந்துவிடுகின்றன. இதுபற்றி மாநகராட்சி ஆணையர், கவுன்சிலர்களிடம் மனு வழங்கி தீர்வு கிடைக்கவில்லை. முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ