உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தம்பதியை வெட்டிய ஆசாமிக்கு காப்பு

தம்பதியை வெட்டிய ஆசாமிக்கு காப்பு

கோபி, கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி, 70, விவசாயி; இவர் மனைவி ராஜாமணி, 60; இருவரும் கடந்த, 11ம் தேதி மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பச்சியப்பன், 52, போதையில் வந்தார். நல்லசாமியை தகாத வார்த்தையால் திட்டி, அரிவாளால் வெட்ட சென்றார். தடுத்த நல்லசாமிக்கும், ராஜாமணிக்கும் காயம் ஏற்பட்டது. நல்லசாமி சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பச்சியப்பன் ஓட்டம் பிடித்தார். நல்லசாமி புகாரின்படி, பச்சியப்பனை சிறுவலுார் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ