எப்.எல்., 2 மதுபார் அமைக்க எதிர்ப்பு
ஈரோடு:சென்னிமலை ஒன்றிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் பஞ்., கொங்குநகரில், 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு செயல்படும் இரண்டு தனியார் பள்ளிகளில், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன மதுபார் அமைக்கும் பணி நடக்கிறது.இதனால் மக்கள் மட்டுமின்றி பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்படுவர். உடனடியாக மதுக்கூடத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.