வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு, தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பிற துறை சார்ந்த பணிகளை திணிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.