உரமான குப்பையால் ரூ.1.54 லட்சம் வருவாய்
கோபி : கோபி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 30 வார்டுகளில், 2017 முதல் வீடு வாரியாக, குப்பைகளை தரம் பிரித்து, துப்புரவு பணியாளர்கள் வாங்கி செல்கின்றனர். இந்த குப்பை மூன்று இடங்களில் செயல்படும், நுண் உர செயலாக்க மையத்தில் உரமாக்கப்படுகிறது. திட்டம் துவங்கிய, ஏழு ஆண்டுகளில், 1,838 டன் குப்பை உரமாகியுள்ளது. டன், 150 ரூபாய் என, 1.54 லட்சம் ரூபாய்க்கு இதுவரை விற்பனையாகி உள்ளது. இன்னும், 25 டன் குப்பை உரம் நகராட்சி நிர்வாகம் இருப்பில் வைத்துள்ளது. இதேபோல் மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை எரிபொருள் உபயோகத்துக்கு, தொழிற்சாலைகளுக்கு, நகராட்சி நிர்வாகம் இலவசமாக வழங்கி வருகிறது.