உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பவானி: சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, பொதுமக்களி-டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பவானி போக்குவ-ரத்து, சட்டம் ஒழுங்கு போலீசாருடன், தனியார் தொண்டு நிறு-வனம் இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. வர்ணாபுரத்தில் உள்ள நகரவை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர்கள் கஸ்துாரி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்-தனர். நகராட்சி தலைவர் சிந்துாரி உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேர-ணியில், மாணவ, மாணவியர், தலைகவசம் அணிந்து பைக் ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு கோஷத்துடன் துவங்கி, அந்தியூர் பிரிவு, யூனியன் அலுவலகம் சென்று, மீண்டும் பள்ளியில் பேரணி முடிவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை