உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்; இன்றும் பணி நடக்கும் என அறிவிப்பு

அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்; இன்றும் பணி நடக்கும் என அறிவிப்பு

அந்தியூர்: அந்தியூரில் அண்ணாமடுவில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் பர்கூர் ரோடு, அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில், சாலையோர கடைக்காரர்கள் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் போனது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி அந்தியூர் உதவி பொறியாளர் பாபு சரவணன் மேற்பார்வையில், இடையூறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது.பவானி ரோட்டில் ஸ்டேட் பாங்க் அருகிலிருந்து இண்டியன் ஓவர்சீஸ் வங்கி வரை; பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்து தாலுகா அலுவலகம் வரை; போலீஸ் ஸ்டேஷன் பிரிவிலிருந்து மத்திய கூட்டுறவு வங்கி வரை என இருபுறங்களிலும் கடை, வீடுகளின் ஆக்கிரமிப்புகள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் பகுதி, கனரா வங்கி முன்புள்ள ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்படும். அடுத்த வாரம் அந்தியூர்- அத்தாணி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை