மேலும் செய்திகள்
கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜை
08-Oct-2025
புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த பனையம்பள்ளி சொலவனூர் மேடு அருகே கன்னிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. பூசாரி பழனிச்சாமி, 48, நேற்றிரவு வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மக்கள் தகவலின்படி கோவில் நிர்வாகிகள் சென்று பார்த்தனர். கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததால், புன்செய் புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பீரோவில், 15 ஆயிரம் ரூபாய், வெள்ளிக்குடை மற்றும் கோவிலுக்குள் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி.,- டி.வி., திருட்டு போனது தெரிய வந்தது. புளியம்பட்டி போலீசார் கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
08-Oct-2025