உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து ரூ.11 லட்சம் அபேஸ்

ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து ரூ.11 லட்சம் அபேஸ்

அரக்கோணம், அரக்கோணத்தில் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.,விடம், வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து, 11 லட்சம் ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், மணவூரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., ஆனந்தன், 65. இவர் கடந்த, 15ம் தேதி சொந்த வேலையாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வந்தார். அங்குள்ள வங்கி ஏ.டி.எம்., சென்றார். அவருக்கு பணம் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த ஒருவர் உதவி செய்வது போல் வந்து, ஆனந்தனின் ஏ.டி.எம்., கார்டு மற்றும் பின் நம்பரை பெற்று, தலா, 10,000 ரூபாய் என இருமுறை எடுத்து கொடுத்துள்ளார். பின், ஏ.டி.எம்., கார்டை ஆனந்தனிடம் கொடுத்துள்ளார். சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன், 'ஆப்' செய்திருந்த மொபைல்போனை நேற்று முன்தினம் தான், 'ஆன்' செய்துள்ளார். அப்போது, அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக பல எஸ்.எம்.எஸ்., வந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த ஆனந்தன், தன்னிடமிருந்த ஏ.டி.எம்., கார்டை பார்த்தபோது, அது அவருடையது இல்லை என தெரிந்தது. தன் வங்கி கணக்கை ஆய்வு செய்தார். அப்போது அவரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 11 லட்சம் ரூபாயை வங்கி கணக்கிலிருந்து எடுத்திருப்பது தெரியவந்தது. அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி