உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு சின்ன மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.2.50 லட்சம் காணிக்கை

ஈரோடு சின்ன மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.2.50 லட்சம் காணிக்கை

ஈரோடு ஈரோடு, சின்ன மாரியம்மன் கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.5 லட்சம் செலுத்தி உள்ளனர்.ஈரோடு, சின்ன மாரியம்மன் கோவிலில் உள்ள இரண்டு உண்டியல்கள், மார்கழியில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின் நேற்று மதியம் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவில் ஊழியர்கள், பொதுமக்கள், பூசாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.கோவில் தேர் திருவிழா, கம்பம் விழா நடந்ததால் காணிக்கை அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் அஞ்சுகம் தலைமையில், சரக ஆய்வர் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு லட்சத்து, 51 ஆயிரத்து, 745 ரூபாய், 760 மில்லி கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கைகளாக பக்தர்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை