உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.28 லட்சம் பறிமுதல்

ரூ.3.28 லட்சம் பறிமுதல்

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை தேர்தல் பறக்கும் படையினரால், 1.90 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. மொடக்குறிச்சி தொகுதியில், 1.60 லட்சம் ரூபாய், பெருந்துறை தொகுதியில், 1.68 லட்சம் ரூபாய் என, 3.28 லட்சம் ரூபாயை நேற்று பறிமுதல் செய்தனர். இத்துடன் சேர்த்து ஒரு கோடியே, 94 லட்சத்து, 22,770 ரூபாயை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால் ஒரு கோடியே, 84 லட்சத்து, 11,170 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ