உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாகன சோதனையில் ரூ.53 ஆயிரம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.53 ஆயிரம் பறிமுதல்

கோபி: கோபி அருகே வாகன சோதனையில், தேர்தல் பறக்கும்படை குழுவினர், 53 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோபி அருகே கவுண்டம்பாளையம் பகுதியில், தேர்தல் பறக்கும் படை குழுவினர், நேற்று காலை 7:55 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த, 407 வேன் வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது, சத்தியமங்கலத்தை சேர்ந்த மாதன், 45, என்ற டிரைவர், உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 53 ஆயிரத்தை 600 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ