ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.55 ஆயிரம் பறிமுதல்
பெருந்துறை : பெருந்துறை தேர்தல் பறக்கும் படையினர், நேற்று மதியம் சிறுக்களஞ்சி பஸ் ஸ்டாப் அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சரியான ஆவணங்கள் இன்றி ரூ.55 ஆயிரம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், திருப்பூர் மண்ணரை, முல்லை நகரை சேர்ந்த காளிங்கன் என்பதும், இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருவதும் தெரியவந்தது. கம்பெனிக்கு ரூ.55 ஆயிரத்தை எடுத்து செல்வதாக கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால், 55 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பெருந்துறை துணை தாசில்தார் சுந்தரம்மாளிடம் ஒப்படைத்தனர்.