உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.21.28 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை

ரூ.21.28 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை

ஈரோடு, மொடக்குறிச்சி, உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 47,132 தேங்காய்கள் வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 40.42 முதல், 76.76 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 17,049 கிலோ தேங்காய், 10 லட்சத்து, 53 ஆயிரத்து, 678 ரூபாய்க்கு விலை போனது.கொப்பரை தேங்காய், முதல் தரம் ஒரு கிலோ, 216 முதல், 226.10 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 155 முதல், 211.60 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 5,014 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 10 லட்சத்து, 74 ஆயிரத்து, 786 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, 21 லட்சத்து, 28 ஆயிரத்து, 464 ரூபாய்க்கு விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ