கேரளா வியாபாரிகள் வருகையால் ஜவுளி சந்தையில் விற்பனை உயர்வு
கேரளா வியாபாரிகள் வருகையால்ஜவுளி சந்தையில் விற்பனை உயர்வுஈரோடு, டிச. 11-ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஜவுளி சந்தை நடந்தது. கடந்த வாரங்களில் குறைந்த அளவிலேயே வியாபாரிகள், கடைக்காரர்கள், மக்கள் வந்ததால் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது.ஆனால், இந்த வாரம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள், மக்கள் ஓரளவு வந்தனர். குளிர் காலமாக உள்ளதால் பெட்ஷீட், துண்டு, லுங்கி, நெட்டி, மெத்தை விரிப்புகள், புடவை, உள்ளாடைகள், காட்டன் ஜவுளிகள் விற்பனையாகின. ஸ்வெட்டர் போன்ற கடினமான துணிகள் ஓரளவு விற்றன.இதனிடையே கிறிஸ்துமஸ், அதை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு, தை பொங்கல் மொத்த விற்பனை, ஆர்டர் வரத்துவங்கி உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த வியாபாரிகள், அப்பண்டிகைக்கான துணிகளை வாங்கியும், ஆர்டர் போட்டும் சென்றனர். வரும் வாரம் கூடுதலாக விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.