மேலும் செய்திகள்
அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
29-Oct-2024
சத்தியில் அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் சத்தியமங்கலம், நவ. 10-அ.தி.மு.க., ஈரோடு புறநகர் மாவட்டம் சார்பில் அந்தியூர், கோபி, பவானிசாகர் சட்டசபை தொகுதிகளுக்கான, செயல்வீரர் ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது. பவானிசாகர் எம்.எல்.ஏ.,பண்ணாரி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில தலைவர் பரமசிவம் தலைமை வகித்தனர். கூட்டத்தில் கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வும், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் பேசினார். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
29-Oct-2024