புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
ஈரோடு, டிச. 18-ஈரோடு மாவட்டத்தில் கூல் லிப், ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மணிஷ், மாநகர நல அதிகாரி கார்த்திகேயன் ஆலோசனை பேரில், மாநகராட்சியில் தினமும் போதைப்பொருள் சோதனை நடந்து வருகிறது. ஈரோடு இரண்டாம் மண்டல சுகாதார ஆய்வாளர் பூபாலன் தலைமையில் வீரப்பன்சத்திரம், சத்தி ரோடு பகுதி மற்றும் வி.சி.டி.வி. ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு கடைகளில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களான கூல் லிப், ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் விற்பனைக்கு இருப்பது கண்டறியப்பட்டது.உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு, இரு கடைகளையும் பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.