தலைமை தபால் நிலையத்துக்கு 2ம் முறையாக குண்டு மிரட்டல்
ஈரோடு:ஈரோடு காந்திஜி சாலையில் தலைமை தபால் நிலையம் செயல்-படுகிறது. அலுவலக இ-மெயிலுக்கு நேற்று மதியம், 12:30 மணியளவில் ஒரு தகவல் வந்தது. அதில், 1:15 மணிக்கு வெடி-குண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தபால் நிலைய அலுவலர்கள், உடனடியாக ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்துக்கு தகவல் தெரிவித்தனர். பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வெளியே வந்தனர். ஈரோடு டவுன் போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை செய்-தனர். ஈரோட்டில் இருந்த வெடிகுண்டு கண்டறிதல் மோப்ப நாய் பவானி, திருச்சி சென்றுள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய் டயானா போலீசாருடன் வரவழைக்கப்-பட்டது. நீண்ட நேரம் தபால் நிலையத்தின் அனைத்து பகுதிக-ளிலும் வெடிகுண்டு உள்ளதா என மோப்பம் பிடித்து சென்றது. ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இது வதந்தி என தெரியவந்தது. கடந்த வாரமும் தபால் நிலையத்தை குறி வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது. இரண்டாம் முறையாக நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்-தியது.