உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலிகாங்கேயம், நவ. 5-காங்கேயத்தை அடுத்த ஆலம்பாடி ஊராட்சி கல்லேரியை சேர்ந்தவர் நாராயணசாமி, 40; காங்கேயத்தில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணி அளவில், காங்கேயம்-சென்னிமலை ரோட்டை கடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிலையில், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தை, காங்கேயம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி