உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணை பகுதிகளில் வண்டல் மண் அள்ளும் பணி நிறுத்தம்

பவானிசாகர் அணை பகுதிகளில் வண்டல் மண் அள்ளும் பணி நிறுத்தம்

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் இருந்து, விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ள, விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கடந்த ஜூன் முதல் மண் அள்ளும் பணிகள் நடந்து வருகிறது.சுற்றுவட்டார விவசாயிகள் சிட்டா, பட்டா, அடங்கல் நகலுடன் விண்ணப்பித்து அனுமதி கடிதம் பெற்று, நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஹிட்டாச்சி வாகனம் மூலம் அள்ளி டிப்பர் லாரிகளில் காராச்சிக்கொரை வன சோதனை சாவடி வழியாக வண்டல் மண் எடுத்து சென்றனர்.இந்நிலையில், பவானிசாகர் அணை நீர் தேக்கத்தின் இக்கரையான வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான லாரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டது. இதனால் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு வண்டல் மண் எடுக்கப்பட்டதால், தற்போது மண் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.அதேசமயம், அணை நீர் தேக்கத்தின் அக்கரையான தெற்கு பகுதியில் வண்டல் மண் அள்ளும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாயாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து அக்கரையான தெற்கு பகுதியில், வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக் கூறுகையில், ''பவானிசாகர் அணை நீர் தேக்கத்தின் இக்கரையான வடக்கு பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட அளவு வண்டல் மண் எடுக்கப்பட்டு விட்டது. அதனால் மண் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அக்கரையான தெற்கு பகுதியில் வண்டல் மண் அள்ள, ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்தால் தான் எடுக்க முடியும். தற்காலிக பாலம் அமைப்பது குறித்து நீர்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை