மரபணு மாற்றிய பருத்தி விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை பாயும்
ஈரோடு:களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி கொண்ட, மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு, 250 ெஹக்டேரில் பருத்தி, பெரும்பாலும் கோடை பருவ சாகுபடியாக பயிரிடப்படுகிறது. நடப்பு சாகுபடிக்கான பருத்தி விதை, விதை விற்பனை நிலை-யங்களுக்கு வந்துள்ளன. இதில் சாகுபடிக்கு அரசால் அங்கீகரிக்-கப்பட்ட பி.டி., ரகம் எனப்படும் காய்ப்புழுவை எதிர்க்கும் சக்தி-யுடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், பெரும்பான்-மையான பருத்தி விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்படாத, களை கொல்லி எதிர்ப்பு சக்தி கொண்ட மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்பனை செய்வது சட்ட விரோதம். அவற்றை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கும். மனித குலத்துக்கு கேடு ஏற்படும். எனவே விதை விற்பனையாளர்கள், சாதாரண ரக பருத்தி விதை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி., ரக விதைகளை மட்டும் விற்க வேண்டும். அரசு அங்கீகரிக்காத மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்-வாறு தெரிவித்துள்ளார்.