பவானிசாகர் அணை நீர்வரத்து கடும் சரிவு
பவானிசாகர் : ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று அணை நீர்வரத்து வினாடிக்கு, 31 கன அடியாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி 108 கன அடி வந்தது. நேற்று அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம், அரக்கன்கோட்டை தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்காக, 3,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 85.58 அடி, நீர் இருப்பு, 18.8 டி.எம்.சி.,யாக இருந்தது. பவானிசாகர் அணையின், 70 ஆண்டு கால வரலாற்றில், நடப்பாண்டுதான் கோடை சீசனில், முதன் முறையாக நீர்வரத்து, 31 கனஅடியாக சரிந்துள்ளது. இதற்கு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாதததே காரணம் என்று அதிகாரிகள் கூறினர்.