அரசு விடுதி மாணவர்களுக்கு கேடயம்
ஈரோடு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்-பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மையினர் நலத்-துறை சார்பில் பள்ளி, கல்லுாரி விடுதி மாணவ, மாணவியருக்கான கலைத்திருவிழா ஈரோட்டில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற, 72 பேருக்கு பதக்கம், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி வழங்கினார். விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்-பியன் பட்டத்தை வேலம்பாளையம் கல்லுாரி மாணவர் விடுதியினரும், அவல்பூந்துறை பள்ளி மாணவியர் விடுதியினரும் பெற்றனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்-பட்டோர் நல அலுவலர் முரளி, மாவட்ட விளை-யாட்டு அலுவலர் சதீஷ்குமார் பங்கேற்றனர்.