மீண்டும் மஞ்சள் குடிநீர் வினியோகத்தால் அதிர்ச்சி
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் சில வாரங்களுக்கு முன்பு, மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, 13வது வார்டு அம்மன் நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தண்ணீரை பாத்திரங்களில் சேகரித்து வைத்தபோது மஞ்சள் நிறத்துக்கு மாறியது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுத்திகரிக்கப்பட்ட சுகாதார குடிநீர் வழங்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.