உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ வழக்கு பதிவால் கடை உரிமையாளர் ஓட்டம்

போக்சோ வழக்கு பதிவால் கடை உரிமையாளர் ஓட்டம்

ஈரோடு: ஈரோடு, என்.எம்.எஸ்., காம்பவுண்டில் ஸ்ரீடெக்ஸ் பெயரில் ஜவு-ளிக்கடை வைத்திருப்பவர் சண்முகசுந்தரம், 45, திருமணம் ஆனவர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வசிக்கிறார். ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த சண்முக சுந்தரம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !