உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மோதியதில் கடைக்காரர் சாவு

கார் மோதியதில் கடைக்காரர் சாவு

ஈரோடு: ஈரோடு, கொங்கம்பாளையம், சத்தி மெயின் ரோடு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மைக்கேல் தேவராஜ், 48; நெல்லை கமலம் ஸ்டோர்ஸ் பெயரில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த, 15ம் தேதி மதியம் கனிராவுத்தர் குளம் சாலையில் டூவீலரில் சென்றார். அதிவேகமாக வந்த ஓல்ஸ்வேகன் கார் டூவீலர் மீது மோதியது. இதில் மைக்கேல் தேவராஜ் தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி