புகாரில் சிக்கிய எஸ்.ஐ., மாற்றம்
ஈரோடு:புகாருக்கு ஆளாகி ஆயுதப்படையில் பணியாற்றிய எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், கோபி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் ஆறுமுகம். கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக எஸ்.ஐ., செயல்படுவதாக, கோவை டி.ஐ.ஜி., சசி மோகனிடம் புகாரளித்தனர். இதையடுத்து ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு, ஆறுமுகம் செப்., 2ல் மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. இதன் அடிப்படையில் சத்தி சப்-டிவிசனுக்கு உட்பட்ட, கடம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று இடமாற்றம் செய்து, எஸ்.பி., சுஜாதா உத்தரவிட்டார்.