எஸ்.ஐ., பணியிட மாற்றம்
ஈரோடு, கோபி எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கோபியில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து, கோபி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆறுமுகம் விசாரித்துள்ளார். குறிப்பிட்ட பிரிவுக்கு ஆதரவாக, மற்றொரு பிரிவை பழித்து பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், ஈரோடு எஸ்.பி.,சுஜாதாவிடம் புகார் அளித்தனர். அதன்பின் கோவை சரக டி.ஐ.ஜி., சசி மோகனிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் எஸ்.ஐ., ஆறுமுகத்தை, ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி,. உத்தரவிட்டார்.நேற்று காலை ஆறுமுகம் ஆயுதப்படையில் சேர்ந்தார். இந்நிலையில், குறிப்பிட்ட பிரிவை இழிவதாக பேசியதற்கு, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, அவருக்கு போலீஸ் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.