உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் பாய்ச்சுவதில் அரிவாள் வெட்டு

தண்ணீர் பாய்ச்சுவதில் அரிவாள் வெட்டு

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த கரிதொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பொது கிணற்றில் தண்ணீர் எடுத்து நீர் பாய்ச்சுவதில் பிரச்னை உள்ளது. ராஜன் நகர் பகுதியில் சுந்தரம் நேற்று காலை வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஸ்ரீதர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுந்தரத்தை கையில் வெட்டிவிட்டு தப்பினார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலைமறைவான ஸ்ரீதரை சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை