பட்டுக்கூடு கிலோ ரூ.700க்கு விற்பனை
பட்டுக்கூடு கிலோரூ.700க்கு விற்பனைஈரோடு, நவ. 22-ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில், 10,000 ஏக்கர் வரை பட்டுப்புழு உற்பத்திக்கான மல்பெரி சாகுபடி செய்து, பட்டுப்புழு உற்பத்தியாகிறது. கடந்த மே-ஜூன் மாதம் தர்மபுரி, கர்நாடகாவில் ஒரு கிலோ, 450 முதல், 525 ரூபாய்க்குள் இருந்தது. செப்., மாதம் தரமான பட்டுக்கூடுகள், 600 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, 600 முதல், 700 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாவதால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.மல்பெரி புதிய நடவு ஏக்கருக்கு, 25,000 ரூபாய், ெஷட் அமைக்க, 2 லட்சம் ரூபாய், தளவாட பொருட்கள் வாங்க ஒன்றரை லட்சம் ரூபாய் உட்பட, 5 லட்சம் ரூபாய் வரை மானியமாக அரசு வழங்குவதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது சீதோஷ்ண நிலை சீராக உள்ளதால், 100 பட்டுக்கூடு முட்டைக்கு, 90 கிலோ வரை பட்டுக்கூடு கிடைப்பதால் கூடுதல் லாபம் கிடைப்பதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.