உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொங்கல் பண்டிகை நிறைவால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30

பொங்கல் பண்டிகை நிறைவால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30

பு.புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை நேற்று நடந்தது. ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரங்களில், 400 மூட்டை வரத்தான நிலையில், 800 மூட்டை நேற்று வந்தது. வரத்து அதிகரிப்பால் கிலோ, 30 ரூபாயாக விலை சரிந்தது.பொங்கல் பண்டிகையால் கடந்த வாரம் கிலோ, 120 ரூபாய்க்கு விற்ற நிலையில், 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. விலை குறைந்ததால் பலர் கூடுதலாக வாங்கினர். மேலும் விதை வெங்காய விலையும் குறைந்ததால், விவசாயிகள் அதிகம் வாங்கி சென்றனர். சத்தி, தாளவாடி மலை மற்றும் கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகளவில் விதை வெங்காயம் வாங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை