உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 21 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு

21 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு

ஈரோடு;மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 21 நடுநிலை பள்ளிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில், ஈரோடு எம்.பி., பிரகாஷ் ஸ்மார்ட் போர்டு, மேஜை மற்றும் நாற்காலிகளை வழங்கியுள்ளார். இதில் எட்டு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு, மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள சாமிநாதபுரம், கருந்தேவன்பாளையம் உள்ளிட்ட, 15 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுடன் மேஜை மற்றும் நாற்காலியும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் பாடல்கள், புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோ வடிவில் எளிமையான முறையில் கற்க வழிவகை கிடைத்துள்ளது. ஸ்மார்ட் போர்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை எளிதில் கற்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ