உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இதுவரை 11,436 நாய்களுக்கு கு.க.,

இதுவரை 11,436 நாய்களுக்கு கு.க.,

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி வார்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது. இதனால் நாய்கடி படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து, மக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். நாய்க்கடி தொடர்பாக தினந்தோறும் புகார் வருவதால். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துள்ளனர். இதன்படி நாய்களை பிடித்து சென்று சோலாரில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து கருத்தரிப்பு மைய அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியின், 60 வார்டுகளில், 28,000 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாள்தோறும் வார்டு வாரியாக நாய்களை பிடித்து வருகிறோம். நடப்பாண்டில் கடந்த அக்., மாதம் வரை, 6,012 ஆண் நாய்கள், 6,142 பெண் நாய்கள் என, 12,154 தெருநாய்களை பிடித்துள்ளோம். இதில், 5,781 ஆண் நாய்கள், 5,649 பெண் நாய்கள் என, 11,436 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள, 29 அறைகளில் கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. கருத்தடை செயத் பின் ஐந்து நாள் பராமரிப்புக்கு பின், பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு விடப்படுகிறது. ஒரு நாய்க்கு, 1,650 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இதில் மருத்துவர் மற்றும் பணியாளர் சம்பளமும் அடங்கும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை