சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
அந்தியூர்,:சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அந்தியூரில் நேற்று நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்றார். அந்தியூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர், கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, பழம், பூ உள்ளிட்ட சீர்வரிசை தட்டு வழங்கினார். அந்தியூர், அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், வேம்பத்தி, எண்ணமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த, 100 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்கப்பட்டது. தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கு பொது பரிசோதனை செய்து மாத்திரை வழங்கப்பட்டது. நிகழ்வில் அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலுசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.