மகன் மாயம்; பெற்றோர் புகார்
தாராபுரம்; தாராபுரம் சங்கர் மில் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார், 15; ஓராண்டாக உடல் நலக்-குறைவால் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். நேற்று முன்தினம் காலை சிறுவன் மாயமானான். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால், தாரா-புரம் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விடு-தியில் சேர்த்து விடுவதாக பெற்றோர் கூறியதால், கோபித்து கொண்டு சென்று விட்டதாக கூறப்படு-கிறது.