நாளை தெற்கு மாவட்டதி.மு.க., செயற்குழு கூட்டம்
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (8) காலை, 10:00 மணிக்கு ஈரோடு மணல்மேட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமையில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகரம் உட்பட அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். அனைத்து ஒன்றிய, பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, ஜூன், 1ல் மதுரையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடப்பது தொடர்பாக கலந்தாலோசிப்பது போன்றவை உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.