ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்
ஈரோடு:தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு, கண் கருவிழி சரி பார்ப்பு (இ-கே.ஒய்.சி.,) மேற்கொள்ளாத அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலம் விரல் ரேகை, கண் கருவிழி சரி பார்ப்பின் மூலம் இ-கே.ஒய்.சி., மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.