உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 2 தேர்வில் பாஸ் ஆகாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

பிளஸ் 2 தேர்வில் பாஸ் ஆகாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

ஈரோடு:தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவு கடந்த, 8-ல் வெளியானது. ஈரோடு மாவட்டத்தில், 22,478 மாணவ, -மாணவியர் தேர்வு எழுதியதில், 22,225 பேர் தேர்ச்சி பெற்றனர். 253 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத்தேர்வு ஜூன், 29ல் துவங்கி நடக்கிறது. இவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, 89 பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. எந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையோ, அந்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூலமே சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இவர்களுக்கு சிறப்பு வகுப்பு தொடரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி