மேலும் செய்திகள்
ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்
15-Oct-2025
ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்
15-Oct-2025
ஈரோடு: ஈரோடு ப.செ.பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், டி.வி.எஸ்., வீதி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள் இரவு முதல் செவ்வாய் இரவு வரை ஜவுளி சந்தை நடக்கும்.ஜவுளி நேரடி உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் என சாலை ஓர கடை, ஜவுளி சந்தை கடை, பனியன் மார்க்கெட் பகுதிகள், காந்திஜி சாலைகளிலும் ஜவுளி சந்தை நடைபெறும். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில மக்கள், வியாபாரிகள் வாங்கி செல்வர்.இந்தாண்டு தீபாவளி திங்கள்கிழமை வருவதால், நேற்று சிறப்பு ஜவுளி சந்தையை ஏற்பாடு செய்தனர். வெளியூர் வியாபாரிகள் குறைவாக வந்த போதிலும், ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி வியாபாரிகள், ஈரோட்டில் ஏற்கனவே கடைகள், குடோன் வைத்து விற்பனை செய்வோரும் கடைகள் அமைத்து சிறப்பு ஜவுளி சந்தை விற்பனை நடந்தது. தீபாவளி நேரம் என்பதால் வழக்கமான கூட்டமும், கடைகளும் செயல்பட்டன.
15-Oct-2025
15-Oct-2025