மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
ஈரோடு: ஈரோட்டில் தி.மு.க., அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி முன்னிலை வகித்தார்.தெற்கு மாவட்ட சட்டசபை தொகுதி தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, தலைமை கழகத்தினால் நியமிக்கப்பட்ட, மாநில நெசவாளரணி செயலாளர் நாகராஜன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நடக்கும் வாக்காளர் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, புதிய வாக்காளர்களை சேர்க்கவும், இறந்தவர்களை நீக்குவது போன்ற பணிகளை செய்ய வேண்டும். துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளான வரும், 27ல் மாணவ--மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசு வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரக்குமார், மாவட்ட நிர்வாகி செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், செங்கோட்டையன், சாமி, பெரியசாமி, சின்னசாமி, பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், அக்னி சந்துரு, துணை மேயர் செல்வராஜ், தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024