மேலும் செய்திகள்
இலங்கை தமிழர் குடியிருப்பில் ஆய்வு
06-Oct-2025
ஈரோடு, அரச்சலுார் அருகேயுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: மொடக்குறிச்சி யூனியன் வடுகப்பட்டி டவுன் பஞ்.,ல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், 1990 முதல் செயல்படுகிறது. நாங்கள் அங்கேயே குடியிருந்து, வேலைக்கு சென்றும், குழந்தைகளை படிக்க வைத்தும் வருகிறோம். எங்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு, வடுகப்பட்டி டவுன் பஞ்., ஞானபுரம் என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த இடம் அரச்சலுாரில் இருந்து, 7 கி.மீ., துாரத்தில் உள்ளது. அங்கு இதுவரை எந்த குடியிருப்பும் இல்லை. பள்ளி, கல்லுாரி செல்லும் குழந்தைகளுக்கு எவ்வித வசதியும் இல்லை. வெகுதுாரம் சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டும். இடத்தின் மேலே, மிகப்பெரிய மின் டவர்லைன் செல்வதால், மழை காலங்களில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. உடல் நலம் பாதித்தால், மருத்துவமனைக்கு கூட செல்ல இயலாத நிலை உள்ளது. தவிர டவுன் பஞ்., நிர்வாகம் அதே இடத்தில்தான், குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படும். எனவே இவ்விடத்துக்கு பதிலாக மாற்றிடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
06-Oct-2025