உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்ரீராகவேந்திரர் 354வது ஆராதனை விழா

ஸ்ரீராகவேந்திரர் 354வது ஆராதனை விழா

ஈரோடு: ஈரோடு, அக்ரஹார வீதியில் உள்ள, பாதராஜ மடத்தில், ராகவேந்திர சுவாமிகளின், 354வது ஆராதனை மஹோத்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி மிருத்தியுஞ்ஜெயம் மற்றும் தன்வந்திரி ஹோமம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராவேந்திர சுவாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று, நாளை நிர்மால்ய விசர்ஜனம், சேவா சங்கல்பம், பாத பூஜை, பல்லக்கு உத்சவம், கனகாபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் காலையில் நடக்கிறது. மாலையில் தேவரநாம பஜனை, கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. * சென்னிமலை, வீரப்பம்பாளையத்தில் உள்ள கிருஷ்ணதுளசி கோசாலையில், ராகவேந்திர சுவாமிகளின் 354 வது ஆராதனை விழா நடந்தது. உடுப்பி பெஜாவர் மட ஈரோடு கிளை வேதவியாசர் முன்னின்று விழாவை நடத்தினார். இதேபோல் சென்னிமலை மங்கல மகிமை ஸ்ரீராகவேந்திர பக்த சேவா சமிதி சார்பாக, அருணகிரிநாதர் வீதியில் உள்ள ராகவேந்திர இல்லத்தில் ராகவேந்தரின், 354வது ஆராதனை விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை