எஸ்.ஆர்.எம்.யு., ஆர்ப்பாட்டம்
ஈரோடு: சதர்ன் ரயில்வே மஸ்தூர் யுனியன் (எஸ்.ஆர்.எம்.யு.,) சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இரவு பணிப்படி, கூடுதல் நேர பணிப்படி உள்ளிட்டவற்றை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.