உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு,ஈரோடு மாவட்டம், பள்ளபாளையம் டவுன் பஞ்., - தங்கமேட்டில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். பொதுமக்கள் வழங்கிய மனு, பெறப்படும் ஒப்புகை சீட்டு, மனுக்களில் உள்ள விபரம், பதிவேற்றம் போன்றவைகளை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். 2 பயனாளிகளுக்கு வருமான சான்று, 4 பேருக்கு ரேஷன் கார்டு உள்பட, 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மவாட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ