தீயணைப்பு வீரர்களுக்கு 12ம் தேதி மாநில போட்டி
ஈரோடு : தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில் எட்டு மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். ஈரோடு மாவட்ட வீரர்கள் தடகளம், நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். துறை ரீதியான ஒட்டு மொத்த போட்டியில் மூன்றாமிடம் பிடித்தனர். போட்டிகளில் தனித்திறனை வெளிப்படுத்திய வீரர்கள் வரும், 12ம் தேதி முதல் 14 வரை மதுரையில் நடக்கும் மாநில போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் திண்டுக்கல்லில் பயிற்சி பெற்றனர். நாளை மதுரை கிளம்பி செல்வர்.